நீர் மட்டம் உயர்கிறது ; எச்சரிக்கிறது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகள் மற்றும் நீர் நிலைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் அப் பகுதிகளில் வாழும் மக்கள‍ை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 

அந்த வகையில் களு­கங்கை, களனி கங்கை, ஜின் கங்கை, நில்­வளா மற்றும் அத்­த­னலு ஓயா ஆகி­ய­வற்றின் நீர்­மட்டம் அதி­க­ரித்து வருவதுடன் களு­கங்­கைக்கு அண்­மித்­த­தான மது­ரா­வல, ஹொரணை, புளத்­சிங்­கள, இங்­கி­ரிய பிர­தேச செய­ல­கங்­க­ளுக்­குட்­பட்ட மக்­க­ளுக்கும் ஜின் கங்­கைக்கு அண்­மித்த பிர­தே­சங்­க­ளான பத்­தே­கம, நாகொட, வெளி­விட்ட தவ­லம, நெலுவ ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கும் வெள்ள எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.
மேலும் களனி கங்­கையின் நீர்­மட்டம் அதி­க­ரித்து வரு­வ­தனால் கடு­வள, பிய­கம,  களனி, கொலன்­னாவ பிர­தே­சங்­க­ளுக்கும், அத்­த­ன­கலு ஓயா­வுக்கு அண்­மித்த பிர­தே­சங்­க­ளான நீர்­கொ­ழும்பு மினு­வன்­கொட, ஜாஎல, கம்­பஹா பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கும் வெள்ள எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந் நிலையில் சீரற்ற வானிலையினால் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 1200 படையினர் தயாராகவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நீர் மட்டம் உயர்கிறது ; எச்சரிக்கிறது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நீர் மட்டம் உயர்கிறது ; எச்சரிக்கிறது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் Reviewed by NEWS on October 08, 2018 Rating: 5