கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப்பரீட்சை அடுத்த மாதம் இடம்பெறும் –இம்ரான் எம்.பி

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவை 3 -।।குள் இணைத்து கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை அடுத்த மாதம் இடம்பெறும் என கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இந்த நியமனம் தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த வருடம் தொண்டராசிரியர் நியமனத்துக்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டிருந்தது, அதன்பின் நியமனத்துக்கு தகுதியான தொண்டர்களின் விபரங்களை நாம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சிடம் கோரியிருந்தோம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பே தொண்டராசிரியர்களின் விபரங்கள் மாகாண அமைச்சில் இருந்து எமக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த விபரங்களை அடிப்படையாக கொண்டு தொண்டராசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வு நவம்பர் மாதம்12,13 மற்றும் 14ஆம் திகதிகளில் இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் நான்காம் மாடியில் இடம்பெறும்.

நேர்முகத்தேர்வுக்காக தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான கடிதம் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
ஊடகப்பிரிவு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...