தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Oct 9, 2018

தீர்வின்றி தொடரும் வவுனியா குப்பைப் பிரச்சினை!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட சாளம்பைக்குளம் பகுதியில் வவுனியா நகரசபையினருக்கு குப்பை கொட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 ஏக்கர் காணிக்கு அரசாங்க அதிபரினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள போதிலும் இன்று வரையும் காணிக்கு ஆவணம் வழங்கப்படவில்லை என தமிழ் தெற்கு பிரதேச சபையின் தகவல் அலுவலகர் தெரிவித்துள்ளார்.


தகவல் அறியும் சட்டத்தினூடாக கேட்கப்பட்ட தகவல்களுக்கு தகவல் வழங்கப்பட்டு அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் கொட்டப்பட்டு வரும் குப்பைகள் இது வரையில் மீள் சுழற்சிக்குட்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நகரிலிருந்து அகற்றப்பட்டு வரும் குப்பைகள் கொட்டுவதற்கு நகரசபையினருக்கு 20 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக குறித்த காணிக்கு ஆவணம் வழங்கிவைக்கப்படவில்லை. அத்துடன் அங்கு கொட்டப்பட்டு வரும் குப்பைகளும் மீள் சுழற்சிக்குட்படுத்தப்படவிலலை என்பது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages