அன்பிற்கும் வாழ்விற்குமான இளைஞர் கள் அமைப்பினால் "நாம் இளைஞர்கள்" என்ற கருப்பொருளில் இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (18) நாவற்குடா தீபன் அரங்கில் இடம்பெற்றது.

இவ் கண்காட்சி நிகழ்வினை மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி. சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளும் வழங்கி வைத்தார் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் திரு. சிறிஸ் கந்தராஜாவும் கலந்துகொண்டார்.

இந் நிகழ்வில் சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் போன்ற 14 விடயங்களை இளைஞர்கள் காட்சிப்படுத்தி இருந்ததுடன் , அவரின் திறமைகளை வெளிக்கொணரும் நிகழ்வுகளும் இடம்பெற்றன இந் நிகழ்வில் அதிகளவிலான இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது..(எம்.பஹ்த் ஜுனைட்)

Share The News

Ceylon Muslim

Post A Comment: