ஸ்ரீதரனின் அழுங்குப்பிடி; கசிந்தது உண்மை!


தமிழ் மக்களின் விரோதியும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்தவருமான மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள், ரணிலுக்கு மீண்டும் பதவியை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைக் கடிதத்தில் கையெழுத்திட தயக்கம் காட்டுவதற்கான காரணம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் உட்பட ஜனநாயகத்தை விரும்பும் தமிழ் எம்பிக்கள் ஐ தேகவுக்கு சாதகமான இந்த கோரிக்கையில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்த போதும், ஸ்ரீதரன் எம்பி மாத்திரம் விடாப்பிடியாக கையெழுத்திடக் கூடாது என்று அடம்பிடித்து வருவதுடன் ஏனைய எம்பிகளையும் வழி கெடுத்து வருகின்றார்.

மகிந்த ராஜபக்ஷ அணியினர் இவருக்கு வெளிநாடு ஒன்றில் வைத்து பரிமாறிய கோடிக்கணக்கான பணமே, இவர் மகிந்த சார்பு நிலையை எடுத்து, ரணிலுக்கு ஆதரவு வழங்க மறுப்பதற்கு காரணமாகும் என்ற விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமிழ் மக்களை படுகொலை செய்த மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனநாயகப் படுகொலை செய்த மைத்திரி ஆகியோரின் கூட்டுச் சதிக்கு, பணத்திற்காக சோரம் போயுள்ள ஸ்ரீதரனின் நடவடிக்கை தமிழ் கூட்டமைப்பை பிளவு படுத்தலாம் என அச்சம் தெரிவித்துள்ள புலம்பெயர் தமிழர்கள் அவருக்கு எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு கதவடைப்பு செய்ய வேண்டுமென கோரியுள்ளதாக அவுஸ்திரேலியாவில் உள்ள இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...