சபாநாயகரின் கதிரை சுற்றி பொலிஸ் நாய் வளைப்பு- படங்கள்

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனங்கள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் நாய்களினால் சபாநாயகரின் மேசை மற்றும் கதிரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது

அதேபோன்று நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் மேசைக்குள் புகுந்து நாய்கள் சோதனையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகரின் மேசை மீது மற்றும் மேசைக்கு கீழ் கடுமையான சோதனைகளை மேற்கொள்வதற்கு விசேட அதிரடிப்படையினரின் நாய் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அனைத்து உறுப்பினர்களினதும் மேசை, கதிரை மற்றும் ஆவணங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் நுழையும் பகுதியில், உத்தியோகபூர்வ இலக்க தகடுகள் கொண்ட பொலிஸ் அதிகாரிகள் உறுப்பினர்களை முழுமையாக சோதனையிட்டுள்ளனர்.

அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் ஏனைய நாட்களை விடவும் அதிக பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...