எனது “பீல்ட் மார்ஷல்” பட்டத்தை நீக்குவதற்கு சட்டத்தில் இடம் இல்லை!

Ceylon Muslim
0 minute read
எனது “பீல்ட் மார்ஷல்” பட்டத்தை நீக்குவதற்கு சட்டத்தில் இடம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே இதை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

பீல்ட் மார்ஷல் பட்டத்தை வழங்குவதற்கு சட்டத்தில் இடம் காணப்படுகின்றது. எனினும் அதனை நீக்குவதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், "ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக சுமத்தப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், சரத் பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவியை பறிக்க முடியுமா?" என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசாரித்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
To Top