பாராளுமன்றில் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் மற்றும் விஷேட விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் இடமாற்றத்தின் பின்னணி குறித்த தகவல்களை வெளியிட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் பாராளுமன்ற அமர்வுகளின் போது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களால் பாராளுமன்ற பொலிஸார் மீது தண்ணீர் மிளகாய் தூள் கதிரைகள் மற்றும் புத்தகங்களை எறிந்து தாக்குதல் நடாத்தினர்.

மேலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் வழக்கு மற்றும் ரக்பி வீரர் தாஜூதீன் னொலை வழக்கு என்பவற்றை விசாரணை செய்து வந்த குற்றப்புலனாய்வு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.

மேற்கூறப்பட்ட ஜனநாயகத்தை மீறும் செயற்பாடுகளின் பின்னணித்தகவல்களையே இன்று மாலை 5 மணியளவில் அலரி மாளிகையிலிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தினூடக நேரடியாக மக்களுக்கு தெரிவிக்கவுள்ளார் சாகல ரத்நாயக்க.

இவ்வறிவிப்பானது ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share The News

Post A Comment: