இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான கண்டி மாவட்ட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு

2017_2018 கல்வி ஆண்டிற்கு கண்டி மாவட்டத்தில் இருந்து இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அறிமுக மற்றும் அவர்களை ஊக்குவிக்கும் , கெளரவிக்கும் நிகழ்வு கடந்த 2017/11/25 ஞாயிற்றுக் கிழமை அன்று கண்டி இந்து கலாச்சார மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதனை கண்டி மாவட்ட தென் கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்ததுடன் இதில் பிரதம அதீதியாக இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி S.M.M மஸாஹிர்( நளீமி) கலந்துரையாட்டினார்.

மற்றும் இந் நிகழ்வில் விஷேட அதீதிகளாக இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலைச்சார பீட சிரேஷ்ட விரிவுரை M.A.S.F சஹ்தியா, விரிவுரையாளர் M.R.F ரிஸ்மினா அவர்களும் தென் கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதி Mr. M.F நவாஸ் அவர்களும் பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் Mr. E.M.J.M ரிஸ்வி அவர்களும் கண்டி வெஸ்வூட் கல்லூரி, லோயஸ் மகளிர் கல்லூரி பணிப்பாளர் Mr. பாஸிர் முஹித்தீன் அவர்களும் கலந்துரையாடினர்.

மேலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய மாணவர்களுக்கான நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் கிட்டத்தட்ட 250 இற்கும் மேற்பட்ட மாணவர்கள்,பெற்றோர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நபீஸ் நளீர்
(இர்பானி,தென் கிழக்கு பல்கலைக்கழகம்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...