அவசரகால நிலையில் தேர்தல், நடைபெறும் வாய்ப்பு?

புதிய பிரதமர் நியமனத்தையடுத்து இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி இன்றும் ஓயாத நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுத்தேர்தல் ஊடாக தீர்வு காணும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றார். 

நம்பிக்கைக்கு உரிய சட்ட ஆலோசகர்கள் மற்றும் வல்லுனர்களுடன் ஜனாதிபதி சிறிசேன முக்கிய பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றார். 

பொது தேர்தலை நடத்தாது ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வது சாத்தியமற்ற விடயமாகும். அதே போன்று வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட 6 மாகாண சபைகள் முற்றாக செயலிழந்துள்ளது. இவற்றின் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் . மறுப்புறம் அனைத்து அரச நிறுவனங்களும் நிர்வாக ரீதியில் பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ளது. 

அரசியல் ஸ்தீரமற்ற நிலையில் நாடு மோசமான நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி தனது அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் காணப்படும் சவால்கள் , உயர் நீதிமன்ற இடைக்கால தடை மற்றும் சர்வதேச ரீதியில் காணப்படும் அழுத்தங்கள் உள்ளிட்ட சவால்களை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் ஜனாதிபதி முக்கிய பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றார் .

ஆனால் அவ்வாறானதொரு தீர்மானத்திற்கு தற்போது செல்ல வேண்டிய இல்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...