ஹக்கீம் ரிஷாத் ஜனாதிபதியுடன் சந்திப்பு: ஒன்­றி­ணைந்து செயற்­படத் தீர்­மா­னம்

நாட்டின் அர­சி­யலில் ஓர் ஸ்திரத்தன்­மையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் ஒன்­றி­ணைந்து செயற்­படத் தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றன.
இதன் முதற்­கட்­ட­மாக அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும், பாரா-­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிசாத் பதி­யுதீன் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்­கீமும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.
இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும், பாரா-­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிசாத் பதி­யுதீன் கருத்து தெரி­விக்­கையில் நல்­லாட்சி அர­சாங்கம் ஒன்றை நிறு­வு­வ­தற்கு கடந்த தேர்­தலில் சிறு­பான்­மைக்­கட்­சிளும், சிறு­பான்மைச் சமூ­கமும் வழங்­கிய ஒத்­து­ழைப்­பு­க­ளையும், பங்­க­ளிப்­பு­க­ளையும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் விளக்­கினோம்.
நாட்டில் சுமுக நிலை­யினை ஏற்­ப­டுத்தி மக்­களின் சக­வாழ்­வினை உறு­திப்­ப­டுத்­து­மாறு கோரி­யி­ருக்­கிறோம். மாகாண சபைத்­தேர்­தலை புதிய தேர்தல் முறை­யி­லன்றி பழைய முறை­யிலே நடத்­த­வேண்டும் என ஜனா­தி­ப­தி­யிடம் வலி­யு­றுத்­தினோம்.
நாட்டின் ஸ்திரத்­தன்­மையை ஜன­நா­யக ரீதியில் நிலை­நி­றுத்­து­மாறும் ஜனா­தி­ப­தியைக் கோரி­யுள்ளோம்.
இதே­வேளை அமைச்சுப் பத­விகள் பற்றி ஜனா­தி­ப­தி­யு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் பேசப்­ப­ட­வில்லை. எமக்­கி­டையே உள்ள ஒற்­று­மையைக் குலைப்­ப­தற்கு சில சக்­திகள் முயன்று வரு­கின்­றன என்­ப­தையும் ஜனா­தி­ப­திக்கு எடுத்­து­ரைத்தோம்.
ஜனா­தி­ப­தியைப் பத­வியில் அமர்த்­து­வ­தற்கு பங்­க­ளிப்புச் செய்­துள்ள சிறு­பான்மை சமூ­கத்­துக்கு ஜனா­தி­பதி கட­மைப்­பட்­டி­ருக்­கிறார் என்­ப­தையும் விளக்­கினோம்.ன்பதையும் விளக்கினோம்.
அரசியல் களத்தில் மேற்கொள்ளும் தீர்மானம் இருகட்சிகளும் ஒன்றிணைந்தே மேற்கொள்ளும். அது ஜனநாயக ரீதியான தீர்மானமாக அமையும் என்றார்.
-Vidivelli
ஹக்கீம் ரிஷாத் ஜனாதிபதியுடன் சந்திப்பு: ஒன்­றி­ணைந்து செயற்­படத் தீர்­மா­னம் ஹக்கீம் ரிஷாத் ஜனாதிபதியுடன் சந்திப்பு: ஒன்­றி­ணைந்து செயற்­படத் தீர்­மா­னம் Reviewed by Ceylon Muslim on November 05, 2018 Rating: 5