யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போது அவரது மெய்பாதுகாவலர் கொல்லப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 3 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரினால் குறித்த சந்தேக நபர்கள் 3 பேருக்கும் கடும் நிபந்தனைகளுடனான பிணை நேற்று (19) வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 3 பேரும் 2017 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் திகதி தொடக்கம், யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள் 3 பேரும் தலா 2 இலட்சம் ரூபாய் ரொக்க பிணையிலும், 5 இலட்சம் ரூபாய் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 3 பேரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாழ். நீதிவான் நீதிமன்ற அலுவலகத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அவர்கள் 3 பேரும் வெளிநாட்டுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share The News

Ceylon Muslim

Post A Comment: