சஜித் பிரேமதாசவிற்கு முக்கிய பொறுப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், உரிய நேரத்தில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க முன்னிலையாவதில் எந்த மாற்றமும் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை சஜித் பிரேமதாச ஏற்க வேண்டும் என பலரும் கோரி வருகின்ற நிலையில், கட்சிக்குள்ளும் இதனால் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெருக்கடியான இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டும் என கட்சியின் பெரும்பான்மையினோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், உரிய நேரத்தில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...