காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் : அட்மிரல் ரவீந்திர நீதிமன்றில் ஆஜர்

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். 

2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்து நீமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் : அட்மிரல் ரவீந்திர நீதிமன்றில் ஆஜர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் : அட்மிரல் ரவீந்திர நீதிமன்றில்  ஆஜர் Reviewed by NEWS on November 28, 2018 Rating: 5