பிரதமர் மஹிந்த மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்த  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நாட்டை யார் ஆட்சி செய்ய வேண்டுமென்பதை மக்கள் முடிவெடுக்கக் கூடிய சந்தர்ப்பத்தை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலைத் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் முடிவெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குக.. தேர்தலை ஒத்திவைத்த வரலாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளதென்று தெரிவித்த நாமல், ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் முன் செல்லாத வரலாறும் உண்டு என்றுத் தெரிவித்துள்ளார்.

Share The News

Ceylon Muslim

Post A Comment: