தேசிய வாசிப்பு மாத புத்தகக் கண்காட்சி.

தேசிய வாசிப்பு மாதமாகிய  ஒக்டோபர் மாதத்தை முன்னிட்டு  காத்தான்குடி அப்றார் வாசிகசாலையில் "இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான வாசிப்பு" எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சி 04.11.2018 அன்று   நூலக பொறுப்பாளர் KLA.மாஹிர் தலைமையில் காத்தான்குடி அப்றார் வாசிகசாலையில் இடம்பெற்றது..

உள்ளூர் எழுத்தாளர்களின் புத்தகங்கள், பிரபல்யமான நூல்கள், நாவல்கள், சிறுகதை தொகுப்புக்கள், சமய நூல்கள், வரலாற்று ஆவணங்கள் என பல நூல்கள் வாசகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன..
முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வினை காத்தான்குடி நகரசபை செயலாளர் MRF.ரிப்கா ஷபீன் (SALS) அதிதியாகக் கலந்துகொண்டு புத்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்ததுடன் பொது நூலக ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், வாசகர்கள் என பலரும் கலந்துகொண்டு புத்தகக் கண்காட்சியை கண்டு கழித்தனர்.


எம்.பஹ்த் ஜுனைட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...