"சமணலய”விற்கு விளக்கமளித்த சமரசிங்க, கெஹெலிய!

அரசாங்கத்துக்கு ஆதரவாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் யாரையும்  பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தும் வகையில்  வண்ணத்துப்பூச்சி என்ற வார்த்தைப் பிரயோகத்தை  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  பிரயோகிக்கவில்லை. 

அது ஒரு அப்பாவி உயிரினம் எனத் தெரிவித்த  அமைச்சரவை பேச்சாளர்களான  கெஹெலிய  ரம்புக்வெல மற்றும் மஹிந்த சமரசிங்க, ரணில்  மற்றும் அவரைச் சுற்றியுள்ள தரப்பினரே நாட்டின் அனைத்து தீர்மானங்களையும் எடுத்தனர் எனவும் குறிப்பிட்டனர்.

அரசாங்க தகவல் திணைக்களததில் நேற்று நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே  அவர்கள் இதனை கூறினர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...