நாமல் நீதிமன்றில் ஆஜரானார் - விசாரணை ஒத்திவைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு எதிராகவும் கவர்ஸ் கோப்பரேட் சர்வீஸ் நிறுவனத்துக்கு எதிராகவும் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, ​கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் இன்று (30) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

முறைப்பாட்டாளர் தரப்பில் சாட்சியாளர்கள், நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அவர்களை அனைவரும் அடுத்த வழக்குத் தவணையின் போது ஆஜராகுமாறும், நீதிபதி கட்டளையிட்டார். இதேவேளை, பிரதிவாதிகளான நாமல் ராஜபக்ஷ எம்.பி உள்ளிட்ட ஐவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...