இலங்கையின் தற்போதைய களநிலவரம் குறித்த செயலாளர் நாயகத்தின் கருத்துக்களை உள்ளக்கி பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கையின் தற்போதைய களநிலவரம் குறித்த செயலாளர்
நாயகத்தின் கருத்துக்களை உள்ளக்கி பேச்சாளர் வெளியிட்டுள்ள
அறிக்கை

இலங்கை பாராளுமன்றத்தைக் கலைத்து, 2019 ஜனவரி 5 ஆம் திகதி புதிய பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் செயலாளர் நாயகம் அவர்கள் மிகுந்த அக்கறையுடன் அவதானித்து வருகின்றார்.

ஜனநாயகச் செயன்முறை மற்றும் ஜனநாயக அமைப்புகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், முரண்பாடுகளைத் தீர்ப்பதில் சட்டத்தின் ஆட்சி
ஒழுங்குகளுக்கு அமைவாகச் செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் செயலாளர் நாயகம் விசேடமாகச் சுட்டிக் காட்டுகின்றார். 

அத்துடன் அவர் இலங்கையர் அனைவரினதும் சமாதானத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறும், மனித உரிமைகள் நீதி மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றைப் பேணுவது தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுமாறும்
அரசாங்கத்திடம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றார்.

ஃபர்ஹான் ஹக், 
செயலாளர் நாயகத்தின 
 பிரதி பேச்சாளர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்