“மகே ஜனாதிபதி தாத்தா”

௭னது அப்பா நேர்மையானவர் மனித நேயம் மிக்கவர் ஏழைகளின் தோழன் நோயாளிகளின் நன்பன் இவர்களுக்கு கண்ணியம் கொடுப்பதிலும் உதவி செய்வதிலும் எனது அப்பவை விட உயர்ந்தவர்கள் இவ்வுலகில் யாரும் இல்லை...

எனது அப்பா சிறுது காலம் பஸ் சாரதியாகவும் கடமை புரிந்தார்...
அப்போது நடந்த ஓர் சுவாரஸ்யத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்....
ஒரு நாள் எனது அப்பா கண்டியில் இருந்து மஹியங்கணை ஊடாக பொலநறுவை போவதற்கு பஸ்ஸை தயார் படுத்தியுள்ளார் ஆனால் எல்லோரும் ஆசனத்தில் அமர்ந்திருக்க ஓர் கண்பார்வையற்ற வயோதிப பாட்டி மட்டும் ஆசனம் இல்லாமயால் அங்கும் இங்கும் தடுமாறிக் கொண்டிருந்தார் ....

அவருக்கு யாராவது ஆசனத்தை கொடுத்து உதவுமாறு அப்பா பல முறை கூறியும் யாரும் முன் வந்து ஆசனத்தை கொடுத்து உதவி புரியாமையால் சினம் கொண்டெழுந்த என் அப்பா தனது சாரதி ஆசனத்தை கொடுத்து அமரவைத்து பஸ்ஸையும் ஓட்டச்சொன்னதுதான் தாமதம்....
பஸ்ஸினுள் இருந்த பயணிகள் எல்லோருமே தங்கள் பயனப்பொதிகளை தூக்கி எறிந்துவிட்டு யன்னல் வழியாக குதித்தெழுந்து பட்டாம் பூச்சி போல் பறந்து மறைந்தார்களாம்...

சத்துரிக்கா எழுதிய "மகே ஜனாதிபதி தாத்தா (மூண்றாம் பதிப்பு)" புத்தகத்தில் 353 மற்றும் 355 ஆம் பக்கங்களில் இருந்து...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...