ரிஷாட் முதல் வரட்டுமே ! அடுத்து நான் வருகிறேன். தகவல் அனுப்பினார் ஹக்கீம்

"ரிஷாத் பதியுதீன் - உங்கள் பக்கம் வந்தால், நிச்சயமாக நானும் வருவேன்" என்று பிரதமர் மஹிந்தவுக்கு தகவல் அனுப்பியுள்ளார் முகா தலைவர் ரவூப் ஹக்கீம்.

சிலவேளை ரிஷாத் வராமல் விட்டு - நான் மட்டும் வந்தால் மக்கள் செல்வாக்கு ரிஷாதின் பக்கம் திரும்பி விடும். ரிஷாதும் வந்து , நானும் வந்தால் மக்களிடமிருந்து நான் தப்பித்துக்கொள்ள இலகுவாக இருக்கும்.

பிரதமர் யார்? என்பதை விட - ரிஷாத்தின் முடிவுதான் எனக்கு இப்போது முக்கியமாகவுள்ளது என்றெல்லாம் ஹக்கீம் - தான் அனுப்பிய தகவலில் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

இதேவேளை, ரிஷாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - யாருக்கு ஆதரவு என்ற முடிவை இன்று (02) மாலைக்குள் அறிவிக்கவுள்ளது.

மஹிந்த தரப்பு - மக்கள் காங்கிரஸ் எம்முடன் இணைந்தால் ஒரு கெபினட் அமைச்சும் ஒரு இராஜாங்க அமைச்சையும் வழங்க தயார் என குறிப்பிட்டுள்ளது.

இதே வாக்குறுதி முகாவுக்கும் வழங்கப்பட்டபோதிலும் அதனை மறுத்துள்ள முகா , கெபினட் அமைச்சுடன் ஒரு இராஜாங்க அமைச்சையும் இரண்டு பிரதியமைச்சையும் கோரியிருந்தது.

- ஏ.எச்.எம்.பூமுதீன்
ரிஷாட் முதல் வரட்டுமே ! அடுத்து நான் வருகிறேன். தகவல் அனுப்பினார் ஹக்கீம் ரிஷாட் முதல் வரட்டுமே ! அடுத்து நான் வருகிறேன். தகவல் அனுப்பினார் ஹக்கீம் Reviewed by Ceylon Muslim on November 02, 2018 Rating: 5