நாட்டை சீரழிக்கின்றார் சிறிசேன - வெல்கம

ஜனாதிபதியின் நடவடிக்கையால் நாடு செயலிழந்துள்ளது என சாடியுள்ள மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாவான முன்னாள் அமைச்சர் குமார வெல்கம பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறிசேன இலங்கையை உலகநாடுகள் மத்தியில் நகைச்சுவைபொருளாக்கியுள்ளார் என தெரிவித்துள்ள குமார வெல்கம பிரதமர் யார் என்ற விவகாரத்திற்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வை காணவேணடும் என தெரிவித்துள்ளார்.
எமது நாடு அதள பாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் அரச அலுவலகங்களில் எவரும் பணிபுரியாத நிலை உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்கள் யார் உண்மையான பிரதமர் என தெரியாமல் தடுமாற்றத்தில் உள்ளனர் மக்கள் குழம்பிப்போயுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொருநாடும் எங்களை பார்த்து சிரிக்கின்றது அலரிமாளிகையில் ஒரு பிரதமர் இருக்கின்றார் மற்றொரு பிரதமர் பிரதமர் அலுவலகத்தில் இருக்கின்றார் இந்த விடயத்திற்கு நாடாளுமன்றத்தின் மூலம் தீர்வை காணவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்