நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலைக்கு, சபாநாயகரின் செயற்பாடே முழுக்காரணம் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். நாடளுமன்ற செயற்பாடுகளில் சபாநாயகர் சட்டவிரோதமாக செயற்படுவதுடன், பக்கச்சார்புடன் நடந்துகொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

காத்தான்குடியில் நேற்று (18) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, இந்தக் குற்றச்சாட்டை அவர் சுமத்தினார்.

தனது 30 வருடகால அரசியலில் பல சபாநாயகர்களை பல்வேறு மோசமான சூழ்நிலையிலும் சந்தித்துள்ளதாகவும் அவர்கள் யாரும் ஒரு பக்கச்சார்பாக நடந்துகொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையை நிரகாரிப்பதற்கு சபாநாயகருக்கு அதிகாரமில்லையெனவும் ஹிஸ்புல்லாஹ் எம்.பி இதன்போது சுட்டிக்காட்டினார்.

Share The News

Post A Comment: