காத்தான்குடி சம்மேளனத்துடன் அக்குரணை ஜம் இய்யதுல் உலமா சபை சிநேகபூர்வ சந்திப்பு.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுனங்களின் சம்மேளனம் மற்றும் அக்குரணை ஜம் இய்யதுல் உலமா சபை உறுப்பினர்களுடனான சிநேகபூர்வமான சந்திப்பு 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மெளலவி MI.ஆதம்லெப்பை (பலாஹி)தலைமையில் சம்மேளனத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது..







வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ் சிநேகபூர்வ சந்திப்பின் போது சமூகம் சார்ந்த பல தரப்பட்ட விடயங்கள் பற்றியும் நிர்வாக கட்டமைப்புக்கள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் உலமாக்களினால் பல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு ஆரோக்கியமான கருத்துப்பரிமாறல்களுடன் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.


-எம்.பஹ்த் ஜுனைட்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...