கொலையாளிக்கு அடைக்களம் கொடுத்து மாட்டிய மைத்திரி - ராஜிதவின் காரசார உரை

“அன்று ஸ்ரீ விக்ரமவை எஹலிய பொல வெள்ளைர்களுக்கு பாரம் கொடுத்ததைப் போன்று தான் ஜனாதிபதி என்னையையும் மஹிந்தவிற்கு பாரம் கொடுக்க நினைத்தார்” என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான மக்களின் நீதிக் குரல் என்ற போராட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இன்று கண்டி நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டே பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய ராஜித சேனாரத்ன,

“ரணிலுடனான அசாத்தியமான அரசியலில் பயணம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய புத்தகமொன்றை எழுதப் போவதாக தெரிவித்துள்ளார். நாங்களும் ஒரு புத்தகமொன்றை எழுதப் போகிறோம் 1815 காட்டிக் கொடுப்பை அடுத்து மிகப் பெரிய காட்டி கொடுப்பை பற்றி,


இந் நாட்டின் ஜனநாயகத்திற்காகவும், இந் நாட்டு மக்களின் நிம்மதிக்காகவும், அமானுஷ்ய மனித கொலைகள் மற்றும் மிகப் பிரமாண்டமான கொள்ளைகளுக்கு எதிராகவும் எங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து யாராலும் வெற்றி பெற முடியாது என கருதிய காலத்தில் வெற்றி பெற முடியாத யுத்தத்தை வெற்றி பெறுவதற்காக அன்று அவரும் நாங்களும் ஒன்றாக கை கோர்த்து வெளியேறினோம்.

அவ்வாறு வெளியில் வந்து உருவாக்கிய அரசாங்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அவர்(ஜனாதிபதி) இன்று அவருடைய பயணத்தை இடை நிறுத்தியுள்ளார்.

நான் அவரிடம் கேட்பது என்னவென்றால் அவர் இவ்வாறு பயணத்தை இடை நிறுத்தியது மனித கொலைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்த பின்னரா? கொள்ளைகள் தொடர்பாக ஆராய்ந்த பின்னரா? இவை ஒன்றை கூட செய்யாது இன்று அவர் அவரது அறப் போராட்டத்தை காட்டி கொடுத்துள்ளார்.அவர் நின்ற இடத்திலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்வோம் என்பதை இந் நாட்டு மக்களோடு சேர்ந்து அவரும் நினைவில் வைத்துக்கொள்ளட்டும்.நாங்கள் அதை நிறுத்த மாட்டோம்! நாங்கள் இந்த மக்கள் கங்கையை ஒன்று திரட்டி அன்று அவர் கூறிய வாக்குறுதிகளை மக்களுக்கு நிறைவேற்றி கொடுப்போம்.

இன்று மைத்திரிபால சிறிசேனவிற்கு இவையனைத்தும் மறந்து இருந்தாலும் எங்களுக்கோ உங்களுக்கோ இவற்றையெல்லாம் மறக்க முடியாது.


நாங்கள் அன்று கூறியதையோ, கதைத்ததையோ மறக்கவில்லை, இம் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றில் தினந்தோறும் விசாரணைகளை நடைபெறவுள்ளமையால் ஒரு வழக்கு முடிவடைவதற்கு ஒரு மாதம் கூட செல்லாது ஆகையாலேயே இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மஹிந்த ஓடி வந்து மைத்திரியின் காலில் விழுந்து பிரதமர் பதவியை பெற்றுக் கொண்டுள்ளார்.

அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிறைக்கு செல்வார்கள் தாஜூதின் படு கொலை செய்யப்பட்டமைக்கு அவர்கள் தூக்கு மேடைக்கு செல்வார்கள் என தெரிந்தே எங்களது வேலைத்திட்டங்களை கெடுப்பதற்காக இந்த அரசியல் சதித்திட்டங்கள்.

இனைந்து 3 ஆண்டுகளாக அவர்களுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள அரும்பாடு பட்டுள்ளோம்.நாங்கள் உங்களையெல்லாம் எங்கு சந்தித்தாலும் நீங்கள் எம்மிடம் கேட்ட கேள்வி ஏன்? ஐயா படுகொலையாலிகளை இன்னும் விட்டு வைத்திருக்கிறீர்கள் என.அவர்களால் எமது நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறத்தி வைக்க முடியும், ஆனால் நிரந்தரமாக இல்லை, எங்கள் அமைச்சர்களை பணத்திற்காக வாங்க முடியாது அப்படி சென்றவர்கள் மீண்டும் வந்து விட்டார்கள்.எனவே நேர்மையான எங்களது யுத்தம் மெது மெதுவாக கட்டம் கட்டமாக வெற்றியடையும் அவற்றை நாங்கள் வெற்றி கொள்வோம்.

இன்று அவர்களுக்கு பாராளுமன்றம் இல்லை, பாராளுமன்றில் நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்தோம். ஆனால் அவர்கள் மிளகாய் தூள் வீசினார்கள், கதிரைகளில் தண்ணீர் ஊற்றி வைத்தார்கள், கதிரைகளை உடைத்தார்கள் இருப்பினும் நீதிக்காக குரல் கொடுத்து பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றினோம்.

சிறிசேனவிற்கு பெரும்பான்மை இல்லை என்றும் மஹிந்தவிற்கு பெரும்பான்மை இல்லை என்றும் இப்போது முழு உலகத்திற்கும் தெரியும் ஜனாதிபதி பதவியை துறப்பதற்கு தயார் என்றும் இறக்க தயார் என்றும் நேற்றிரவு கூறி விட்டு மத்தும பண்டாவைப் போல அரச இல்லத்தில் ஒழிந்து இருக்கிறார்.

உயிரிழக்க தயார் என்றால் வெளியில் வாருங்கள் போராட்டத்திற்கு முகம் கொடுங்கள் முடியுமென்றால் பாராளுமன்றிற்கு வந்து பாருங்கள் உங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை

நாங்கள் 122இல் நின்று விடப்போவதில்லை வெகு விரைவில் 130ஐ கடந்து காட்டுகிறோம். நான் நேற்று முன் தினம் 113 தேவையில்லை முடியுமென்றால் பாராளுமன்றிற்கு வந்து நாளை(நேற்று) 85 ஆதரவை காட்டு என மஹிந்த ராஜபக்ஷவிற்கு கூறினேன். ஆனால் பாராளுமன்றிலிருந்து எழுந்து சென்று விட்டார்கள்.

பாராளுமன்ற வரலாற்றில் எதிர்கட்சி தான் ஆளும்கட்சியின் பெரும்பான்மைக்கு முகம் கொடுக்க முடியாது எழுந்து செல்வது வழக்கம். ஆனால் இங்கு தான் முதல் முறையாக ஆளும் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது எழுந்து சென்றுள்ளது.

இன்று அவர்களுக்கு பாராளுமன்றமும் இல்லை நாடும் இல்லை மஹிந்தக்களுக்கு வீதியில் இறங்க முடியாது.மரத்துப் போயிருந்த ஐக்கிய தேசிய கட்சியை மைத்திரிபால சிறிசேன தட்டி எழுப்பி விட்டுள்ளார்." என ஆக்ரோஷமாக தெரிவித்தார்.
Share on Google Plus

About NEWS

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment