ரணிலுக்கு மைத்திரியின் பதில்!

ஜனாதிபதியுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற தயார் என, முன்னாள்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கு, தான் உடன்படபோவதில்லையென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளாரென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்  பிரதித்தலைவரான  நாடாளுமன்ற உறுப்பினர் டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்ற தயாரென, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க த இந்து பத்திரிகைக்கு அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்