ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடுவோம் - முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை

ஜனா­தி­பதி பெரும்­பான்மை ஜன­நா­ய­கத்­துக்கு செவி­சாய்க்­கா­விடின் ஐக்­கிய தேசிய முன்­னணி ஏனைய கட்­சி­களை இணைத்­துக்­கொண்டு சிவில் மற்றும் மனித உரிமை அமைப்­புக்­க­ளுடன் இணைந்து அடுத்­த­வாரம் ஜனா­தி­பதி செய­லகம், ஜனா­தி­பதி மாளிகை, ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்லாம் ஆகி­ய­வற்றை சுற்றி வளைப்போம் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார். அலரி மாளி­கையில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

தற்­போ­தைய நிலை­மையில் நாம் கடந்த சில நாட்­க­ளாக ஆர்ப்­பாட்டம் ஊர்­வலம் போராட்­டங்கள் என்­ப­வற்றை நடத்தி வந்தோம். இவை இன்று நாடு முழு­வதும் இடம்­பெற்று கொண்டு இருக்­கின்­றன. கொழும்பு விஹா­ர­மா­தேவி பூங்­கா­வுக்கு அருகில் சிவில் அமைப்­புக்கள் மற்றும் தொழிற்­சங்­கங்கள் இணைந்து சத்­தியாக் கிரக போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளன.

இவை அனைத்தும் நாங்கள் மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகியோரின் அர­சி­ய­ல­மைப்­புக்கு விரோ­த­மான செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கின்றோம். இந்த செயற்­பாடு இடை நிறுத்­தப்­ப­டாமல் தொடர்ந்து கொண்­டிருக்கின்­றது.

கடந்த 14ஆம் திகதி பாரா­ளு­மன்றம் ஆரம்­பித்­ததும் அன்­றி­லி­ருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ராக எமது பெரும்­பான்­மையை நாங்கள் வெளிக்­காட்டி இருக்­கிறோம். ஆனால், நாம் வெ ளிக்­காட்­டிய எமது அந்த பெரும்­பான்மை பலத்தை ஏற்றுக் கொள்ள ஜனா­தி­பதி தயா­ராக இல்லை. ஜனா­தி­பதி நிறை­வேற்று அதி­கா­ரத்தில் இருந்து கொண்டு பாரா­ளு­மன்­றத்­துக்குள் கையை நீட்டும் செயற்­பாட்டை மேற்­கொண்டு வரு­கிறார்.

ஜனா­தி­ப­தியின் ஆலோ­ச­னைக்கு அமை­வா­கவே கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்­துக்குள் செயற்­பட்டு வரு­கின்­றனர். பாரா­ளு­மன்­றத்தில் சபா­நா­யகர் ஆச­னத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அருந்­திகா பெர்­னாண்டோ அமர்ந்­தி­ருந்தார். அவ்­வாறு அம­ரு­மாறு மஹிந்த ராஜ­ப­க் ஷவே ஆலோ­சனை வழங்­கி­யி­ருக்­கிறார். முதலில் அத்­து­ர­லிய ரத்ன தேரரை சபா­நா­யகர் ஆச­னத்தில் அம­ர­வைக்க திட்­ட­மிட்­டுள்­ளனர். ஆனால், ரத்ன தேரர் முடி­யாது என்று கூறி­விட்டார். அதன் பின்­னரே அருந்­திகா பெர்­னாண்டோ அந்த ஆச­னத்தில் அமர்ந்­தி­ருக்­கிறார்.

இதன்­மூலம் ராஜ­பக்ஷ தரப்­பினர் வேண்­டு­மென்றே பாரா­ளு­மன்ற செயற்­பாட்டை குழப்­பு­வது புரி­கி­றது. அதற்கு ஒரு எளி­தான கார­ணமே இருக்­கி­றது. அதா­வது பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பலம் இல்லை என்­பதே அது­வாகும். பொது­வாக பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சியே குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும். ஆனால், ஆளுங்­கட்­சிக்கு பாரா­ளு­மன்றம் சரி­யான முறையில் கூடு­வதே அவ­சி­ய­மா­ன­தாக இருக்க வேண்டும்.

ஆனால், சட்ட விரோ­த­மாக அரச அதி­கா­ரத்தை பிடித்­துள்ள இவர்கள் பாரா­ளு­மன்­றத்தை சுமுக­மாக கொண்டு செல்ல அனு­ம­திக்­காமல் உள்­ளனர். சபா­நா­ய­கரை வர­வி­டாமல் தடுக்­கின்­றனர். அவ­ரது ஆச­னத்தை உடைக்­கின்­றனர். புத்­த­கங்­களை வீசு­கின்­றனர். இவர்கள் தங்­களை ஆளுங்­கட்சி என்று கூறிக்­கொண்­டாலும் இன்னும் எதிர்க்­கட்­சி­யி­லேயே இருக்­கின்­றனர்.

பாரா­ளு­மன்­றத்தை பலப்­ப­டுத்­தவோ வாக்­கெ­டுப்பை நடத்­தவோ இட­ம­ளிக்­காமல் இருக்­கின்­றனர். பெரும்­பான்மை பலம் இல்­லா­த­தா­லேயே சிறி­சேன மஹிந்த தரப்பு இவ்­வாறு செயற்­ப­டு­கி­றது. இந்த பிரச்­சினை பாரா­ளு­மன்­றத்தில் தீர்க்­கக்­கூ­டிய ஒன்­றாகும். சபா­நா­ய­கரை சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளித்தால் இந்தப் பிரச்­சி­னையை தீர்க்­கலாம். இவர்கள் இந்த பிரச்­சி­னையை பாரா­ளு­மன்­றத்­துக்குள் தீர்த்­துக்­கொள்ள இட­ம­ளிக்­கா­விடின் நாம் மாற்று வழி­களை தேடிச் செல்வோம்.

பிர­தி­நி­தித்­துவ ஜன­நா­யகம் பாரா­ளு­மன்ற ஜன­நா­யகம் என்­ப­வற்றை மதிக்­காத இவர்கள் நிறை­வேற்று அதிகாரத்துக்குள் இருந்து பாராளுமன்றத்தை குழப்புவதற்கு இடமளிக்க முடியாது. எனவே ஐக்கிய தேசிய முன்னணி ஏனைய கட்சிகளை வைத்துக்கொண்டு சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புக்களுடன் இணைந்து அடுத்தவாரம் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லாம் ஆகியவற்றை சுற்றி வளைப்போம். ஜனாதிபதி பெரும்பான்மை ஜனநாயகத்துக்கு செவிசாய்க்காவிடின் அவருக்கு பதிலளிக்க எங்களுக்கு தெரியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...