இலங்கை பாராளுமன்றில் இன்றும் பலத்த பாதுகாப்பு!

நாடாளுமன்றத்திற்கும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றிற்கு வருகை தரும் நபர்கள், வாகனங்கள் மற்றும் கொண்டு வரப்படும் பொருட்கள் போன்றன கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இன்றைய தினமும் பொதுமக்கள் மற்றும் விசேட விருந்தினர்களுக்கான பார்வை கூடம் மூடப்பட்டிருக்கும் என உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சோதனை நடவடிக்கைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் மட்டுமே நாடாளுமன்றிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டே நாடாளுமன்றிற்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...