பாதுகாப்பு துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அறியாமல், அந்த துறை செயற்படுமாயின் நாட்டின் எதிர்கால பாதுகாப்பு தொடர்பில் பாரிய சிக்கல் ஏற்படும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் இன்று -20- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி மனு கொடுக்க சென்றிருந்த பிக்குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிகவும் கவலைக்குரியதாக இருந்தது.

ஊடகங்களில் பார்த்த அந்த காட்சிகள் மனதிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் பின்னர், ஜனாதிபதி சில பிக்குமாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சம்பவம் பற்றி தான் அறியவில்லை எனக் கூறி, ஜனாதிபதி மன்னிப்பு கோரியிருந்தார். பிக்குமார் விடுத்த கோரிக்கையை ஆராய்வதாகவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். அது மிகவும் நல்லது. ஆனால், பல கேள்விகள் எழும்புகின்றன.

இப்படியான சம்பவங்கள் ஜனாதிபதிக்கு தெரியாமல் நடக்குமாயின் அது நாட்டின் சட்டம், ஒழுங்கு தொடர்பான மிகப் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். பொறுப்பான அமைச்சின் கட்டளைகள் இன்றி, செயற்படுவார்கள் என்றால், பொலிஸாரும், பாதுகாப்பு தரப்பினரும் யாருடைய கட்டளைகளை செயற்படுத்துகின்றனர் என்ற நியாயமான கேள்வி சாதாரண நடுநிலையான மக்கள் மத்தியில் நிலவுகிறது. இது போன்ற நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அது நாட்டில் பாதுகாப்பு தொடர்பில் பாரதூரமான பிரச்சினை எனவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Share The News

Post A Comment: