பிரதம நீதியரசர் நளின் ஜயலத் பெரேராவுக்கு சபாநாயகரால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாக கூறப்படும் போலியான செய்தி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. 

சபாநாயகரின் ஆலோசனையின் பேரில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம நீதியரசர் நளின் ஜயலத் பெரேராவை கடிதம் ஊடாக தொடர்பு கொண்டதாக, சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியாகி வரும் செய்திகளில் உண்மை இல்லை என சபாநாயகர் அலுவலகம் முன்னர் அறிவித்திருந்தது. 

குறித்த கடிதம் போலியானது என, சபாநாயகர் அலுவலகத்தால் நேற்று (20) வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

பிரதம நீதியரசருக்கு சபாநாயகர் இவ்வாறான ஒரு கடிதத்தையும் அனுப்பி வைக்கவில்லை எனவும் சபாநாயகர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share The News

Post A Comment: