பாராளுமன்ற தெரிவு குழுவிற்கான பிரதான கட்சிகளின் உறுப்பினர்களின் விபரங்கள் இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் விபரங்கள் இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக, அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தெரிவுக்குழுவில் தமக்கே பெரும்பான்மை இருக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜேவிபியின் உறுப்பினர்களின் விபரங்கள் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என அந்த கட்சி சார்பில் இதற்கு முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Share The News

Post A Comment: