ஜனாதிபதிக்கு எதிராக UNP வழக்கு தாக்குதல்

புதிய பிரதமர் நியமிப்பதற்கும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கும் ஜனாதிபதி எடுத்த தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

நேற்றிரவு (23) நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் சட்ட ஆலோசனை பெறப்பட்டதன் பின்னர் ஒரு வாரத்துக்குள் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...