"ரணில் விக்ரமசிங்கவே UNPயின் பிரதமர் வேட்பாளர் "அஜித் பி பெரேராமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளர் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பெற்ற கட்சியின் பிரதமர் யார் என்பதை அந்த கட்சியே தீர்மானிக்கும். பிரதமர் யார் என்பதை தீர்மானிக்க அரசியல் அமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானங்களை மேற்கொள்ள ஜனாதிபதியால் முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே முன்னிலைப்படுத்தப்படுவார் என அஜித் பி பெரேரா உறுதிப்பட குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...