சிறுபான்மை கட்சிகளின் கூட்டுக்கு UNPயில் மாற்றம் தேவை - ஹகீம் (வீடியோ)

சிலோன் முஸ்லிம் அலுவக செய்தியாளர்- 

சிறுபான்மை கட்சிகள் கூட்டமைப்பாக இயங்க வேண்டும் என்றால் சிறுபான்மை சமூகத்தின் அபிலாசைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால்  இந்நாடின் பெரும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் மாற்றங்களோடு நிகழ வேண்டும் என்பதுடன் எதிர்வரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று (28) அலரி மாளிகையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்; 

அடுத்த தேர்தலில் எமது இந்த ஐக்கிய தேசிய கட்சி அணியாக புதிய மாற்றத்துடன், புதிய திடகாத்திரமான  தலைமைகளுடன் பயனிக்க வேண்டும். மக்கள் விரும்பு ம் கட்சியாக மாற்றம் வேண்டும் இல்லையேல் எங்களால் தேர்தலில் முகம் கொக்க முடியாது நிலை உள்ளது. இதனை இக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். 

வீடியோ இணைப்பு: 
சிறுபான்மை கட்சிகளின் கூட்டுக்கு UNPயில் மாற்றம் தேவை - ஹகீம் (வீடியோ) சிறுபான்மை கட்சிகளின் கூட்டுக்கு UNPயில் மாற்றம் தேவை - ஹகீம் (வீடியோ) Reviewed by NEWS on November 29, 2018 Rating: 5