ஒரு வார காலத்திற்குள் மைத்திரி-மகிந்த ஆட்சியை விரட்டுவோம் :UNP ரவிசிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இணைத்துக்கொண்டு ஏற்படுத்தியுள்ள சட்டவிரோத ஆட்சியை இன்னும் ஒரு வாரகாலத்திற்கும் முடிகட்டிவிடுவோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதித் தலைவர் ரவி கருணாநாயக்க அறிவித்திருக்கின்றார்.

மைத்ரி – மஹிந்த கூட்டணியால் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல் சாசனத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமான செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவரம் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளும் நாடு தழுவிய ரீதியில் கண்டனக் கூட்டங்களை நடத்தி வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக இன்றைய தினம் கண்டியில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க, மஹிந்த – மைத்ரி கூட்டணி அமைத்த நாள் முதல் தோல்விகளையே சந்தித்து வருவதாகத் தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் 29 ஆம் திகதி நாடாளுமன்றில் மீண்டுமொரு முறை மஹிந்த – மைத்ரி கும்பல் தோற்கடிக்கப்படும் என்றும் தெரிவித்த ரவி கருணாநாயக்க இம்முறை அவர்களது சட்டவிரோத அரசாங்கத்திற்கான நிதி முடக்கப்படும் என்றும் கூறினார்.

ஏற்கனவே நவம்ர் 14 மற்றும் 16 ஆம் திகதிகயில் நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மஹிந்த – மைத்ரி கும்பலின் சட்டவிரோத அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதுடன்:, நவம்பர் 23 ஆம் திகதி தெரிவக்குழு நியமனம் தொடர்பான வாக்கெடுப்பிலும் தோற்கடிக்கப்பபட்டதாக ரவி தெரிவித்தார்.

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துகொள்ள முடியாது என்ற உண்மையை நன்கு உணர்ந்திருந்தும், மஹிந்த – மைத்ரி தரப்பு அடம்பிடித்து வருவதுடன், தற்போது நாடாளுமன்ற அமர்வுகளையும் பகிஸ்கரிக்க தீர்மானித்துள்ளமை வேடிக்கையாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனாலேயெ இந்த சட்டவிரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து நாடு எதிர்நோக்கியுள்ள மோசமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக சட்டவிரோத அரசாங்கத்திற்கான நிதிகளை முடக்குவதற்காக பிரேரணையை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதுடன், நீதிமன்றிலும் சட்டவிரோத அரசாங்கத்தை முடக்கும் மனுக்களையும் தாக்கல் செய்யவிருப்பதாக ரவி கருணாநாயக்க கூறினார்.

இந்தஇரண்டு மார்க்கங்கள் ஊடகவும் மைத்ரி – மஹிந்த அரசாங்கம் முடக்கப்பட்டு நவம்பர் 31 ஆம் திகதியாகும் போது மீண்டும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்த ரவி கரணாநாயக்க, அதனையடுத்து நாட்டில் ஜனநாயகத்தைகட்டியெழுப்பவதுடன், பொருளாதார பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார்.

தற்போது எற்பட்டுள்ள நிதி நெருக்க ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு சவாலாக அமையாது என்றும் தெரிவிக்கும் அவர், நாட்டின் அபிவிருத்திக்கும், பல பில்லியன் ரூபா கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும் அதேபோல் நாட்டு மக்களுக்கான நிவாரணங்கள், சலுகைகள் மற்றும் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான நிதியை தம்மால் திரட்டிக்கொள்ள முடியும் என்று சூளுரைத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...