பாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது !ஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பு இலத்திரனியல் முறையில் இடம்பெற்றது.

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 117 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை . அதன்படி குறித்த பிரேரணை 117 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்டிருந்த குறித்த பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதுடன் மக்கள் விடுதலை முன்னணி வாக்கெடுப்பை புறக்கணித்திருந்தது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...