அரசியலமைப்புக்கு இணங்க செயற்படுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாகவும், எதிர்வரும் 24 மணி நேரத்திற்குள் அரசியலில் மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (03) பிற்பகல் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக, இரா. சம்பந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் தமிழ்த்​தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Share The News

Post A Comment: