அம்பாறையில் 62 வீதம் வெள்ளப்பெருக்கினால் பாதிப்பு!அம்பாறை மாவட்டத்தில் ஏற்படும் அனர்த்தங்களில், 62 சதவீதமானவை வெள்ளப்பெருக்கால் ஏற்படுவதாக, 2008 தொடக்கம் 2017ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் இடம்பெற்ற அனர்த்தங்களின் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றனவென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்டத்துக்கான உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர், இதனைத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...