முசலிப்பிரதேசபையின் வரவுசெலவு திட்டம் வெற்றி!

Musali , Mannar
முசலிப்பிரதேசபையின் தவிசாளர் கலீபத் சுபியான் அவர்களினால் (11) சபையில் முன்வைக்கப்பட்ட 2019ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆளுகைக்குள் இருக்கும் முசலிப்பிரதேசபையில் , முஸ்லீம் காங்கிரஸ், தமிழ் தேசியக்கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, சுதந்திரக்கட்சி ,பொது ஜன பெரமுன, உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் முசலிப்பிரதேசபையில் தவிசாளரினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேறியது விசேஷட அம்சமாகும்...

முசலிப்பிரதேசபையின் தவிசாளர் கலிபத் சுபியான் அவர்களினால் எதிர்காலத்தில் எமது பிரதேசபையின் வருமானத்தை மேலும் அதிகரிப்பது தொடர்பாகவும் அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் உறுப்பினர்கள் தமது ஆதரவினை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

வரவுசெலவு திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும் முசலிப்பிரதேசபையின் தவிசாளர் கலிபத் சுபியான் நன்றிகளை தெரிவித்தார்.

ரிசாத் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...