றஸ்மின், ராசிக் பணதிற்காக பிரிந்தவர்கள் - BBS சந்திப்பு தொடர்பில் அசாத் சாலி

பணத்திற்காக இயக்கங்களாக பிரிந்து சென்றவர்களே றஸ்மின் மற்றும் ராசிக் இவர்கள் எம்மை பற்றி விமர்சிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை. புதிதாக பணத்தினை பிரித்துக்கொள்ள முடியாமல் மார்க்க அமைப்புக்களை உருவாக்கிய இவர்கள் பற்றி முழு இலங்கை முஸ்லிம்களுக்கும் நன்றாகவே தெரியும். இவர்களுக்கு பணம்கிடைத்தால் எப்படி ஆடுவார்கள், பணம் கிடைக்காவிட்டால் எப்படி ஆடுவார்கள் என மக்களுக்கு நன்றாகவே தெரியும் ஆகவே இவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய தேவை எனக்கில்லை. என அசாத் சாலி தெரிவித்தார். 

அண்மையில் பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை சிறைச்சாலை சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டமை தொடர்பில் சிலோன் முஸ்லிம் இணையதளத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;


நாங்கள் எந்த வேலையை எடுத்தாலும் அது இந்த நாட்டு முஸ்லிம்களின் நண்மைக்காவே செயற்படுவோம். பொதுபல சேனாவை நாங்கள் விமர்சித்து போல் வேறு எவறும் விமர்சிக்கவில்லை. பிற்பாடு நாங்களாகவே 05தடவைகள் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் வீட்டில் ஞனசாரவை சந்தித்து இஸ்லாத்தை அவர் எவ்வாறு புரிந்துகொண்டுள்ளார் என்பதை அறிந்து அவருடைய சதேகங்களை சீர்செய்தோம், இஸ்லாத்தைப் பற்றி தெளிவு வழங்கினோம்.

மியன்மார் முஸ்லிம்களின் பிரச்சினை மற்றும் கிந்தோட்டை பிரச்சினைகளின் போது ஞனசாரவை நாம் பாவித்தோம், அவரை பாவித்து பிரச்சினைக்கு தீர்வு கண்டோம்.

அவ்வாறான ஒருவர் சுகமில்லாத நிலையில் இருக்கும் போது, மார்க்கத்தின் வழிகாட்டலுக்கு அமைய அவரை பார்வையிட்டோம் பார்வையிட்டு “மிக அழகாக தாடியுடன் இருக்கின்றீர்கள் என கூறினோம், சிங்கள குர்-ஆனை படிக்குமாறும் கோரினேன்” அவ்விடத்தில் நான் குர்-ஆனை வழங்கவில்லை, அவரிடம் குர்-ஆன் உள்ளது எனவும் தெரிவித்தார்.

எம்மிடம் பேசி ஒலிப்பதிவுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...