எனக்கு எதிராக ஜனாதிபதி கூறிய விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு கடந்த அமர்வைப் போன்று இந்த அமர்விலும் பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா கேட்டுக்கொண்டார்.

இன்றைய சபை அமர்வில் சரத் பொன்சேகாவிற்கான நேர ஒதுக்கீட்டின் போதே மேற்கண்டவாறு தெரவித்தார். மேலும் நேற்று முன் தினம் நடைபெற்ற கூட்டத்தில் கூட ஜனாதிபதி என்னை விமர்சித்துள்ளார். அவருக்கு என்னைப் பற்றி விமர்சிக்காது வேறு வேலை செய்ய முடியாது” என சரத்பொன்சேகா தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த சரத்பொன்சேகா 2010ஆம் ஆண்டு தேர்தலில் தான் வெற்றிப் பெற்றிருந்தால் நாட்டை படு மோசமான இந் நிலைக்கு கொண்டு வந்திருக்கவும் மாட்டேன் எனவும் தெரிவித்தார்.

Share The News

Post A Comment: