ஜனாதிபதி பாலர் பாடசாலை சிறுவர் போல் ஆகிவிட்டார். - பாராளுமன்றில் நசீர்

(கொழும்பு)
பொத்துவிலுக்கு தனியான வலயத்தினை பெற்றுக்கொடுக்க முடியாத ஒரு ஆட்சியாக இந்த ஆட்சிய செயற்பட்டத்தை நினைத்து நான் கவலையடைகின்றேன் என ஏ.எல்.எம் நஸீர் பாராளுமன்றில் உரையாற்றினார்..

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; 

இந்த ஆட்சி மூலம், இதுவரை பொத்துவில்,அக்கரைப்பற்று, அஷ்ரப் நகர் , மட்டக்களப்பு,புல்மோட்டை மற்றும் திருகோணமலை போன்ற பிரதேசதங்களில் காணிப்பிரச்சினைகள் இருந்தும் அதை தீர்க்க முடியாத அரசாக செயற்பட்டதை நினைத்து கவலையடைகின்றேன்.

மேலும், ஜனாதிபதி அவர்கள் அன்மையில் பேசிவரும் விடயங்கள் “தலைகுழம்பியவர்கள்” போன்று செயற்படுவதாகவும், பாலர் பாடசாலைக்குச் செல்லும் சிறுவர்கள் போல் பேசுவதை நினைத்து கவலையடைகின்றோம், மக்கள் தொடர்ந்தும் ஜனாதிபதியின் நிலை கருதி மிக மோசமாக பேசுகின்றனர்.  எனவும் அங்கு உரையாற்றினார்.
வீடியோ>>>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...