தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Dec 22, 2018

ஜனாதிபதியினால் ஒரே ஒரு முஸ்லிம் செயலாளர் நியமனம் :நிறைவேற்று அதிகாரம்

புதிய அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (21) மாலை நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியினால் 30 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வகையில் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சுக்கு திருமதி எஸ்.எம். முஹம்மத் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகின்றது. சகல அமைச்சுக்களின் செயற்பாடுகளும் ஜனாதிபதியினூடாக இடம்பெறச் செய்வதற்கே இந்த ஏற்பாடாகும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களுள் இதுவும் ஒன்றாக கருதப்படுகின்றது. சகல அமைச்சுக்களுக்கும் நேரடியாக செயலாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டுள்ளார். செயலாளர்களின் இறுதி ஒப்பத்துடனேயே அமைச்சுக்களின் அத்தனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages