காத்தான்குடியில் பிரத்தியேக வகுப்புகள் நடத்த தடை

காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் டிசம்பர் 15 ஆம் திகதியில் இருந்து ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை ஆரம்ப வகுப்புக்கள் துவக்கம் உயர்தர வகுப்புகள் வரையிலான பிரத்தியேக வகுப்புகள், அல் குர் ஆன் பாடசாலைகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறையை மாணவர்கள் சிறந்த முறையில் அனுபவிக்கும் வகையில் காத்தான்குடி நகர சபை, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், சுகாதார பணிமனை ஆகியன இணைந்து இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் இத் தடையை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் பிரத்தியேக வகுப்புகள், அல் குர் ஆன் பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தவிசாளர் மேலும் குறிப்பிட்டார்.

எம்.பஹ்த் ஜுனைட்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...