அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

அவரை கடும் எச்சரிக்கையுடன் நீதவான் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். 

2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து கடந்த நவம்பர் 28ம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜரான அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...