ரணிலையோ, ஐ தே க வையோ பாதுகாப்பது எமது நோக்கமில்லை! - ரிஷாட்

“ ஐக்கிய தேசியக் கட்சியையோ அல்லது அதன் தலைவர் ரணிலையோ பாதுகாக்கின்ற தேவைப்பாடு அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு இல்லை எனவும், ஆனால் அரசியலமைப்புக்கு எதிரான ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராகவே போராடுகின்றோம்” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நேற்று (வியாழக்கிழமை) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றிருந்த றிசாட், அதனை தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க என்ற தனிப்பட்ட நபர் மீது எமக்கு ஆர்வமில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும், ஐ.தே.கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை.

ஜனநாயகத்தை பாதுகாக்கக் கூடிய ஒரே கட்சியாக ஐ.தே.க. காணப்படுகின்ற நிலையினாலும்
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை அரசியலமைப்பு மீறல் என்பதனால்லேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவளித்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...