வவுணதீவில் இரு பொலிசார் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஏலவே 48 வயது முன்னாள் புலி அமைப்பின் உளவுத்துறைப் பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அஜந்தன் என அறியப்படும் மேலும் ஒரு நபர் தற்போது தேடப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

புனவார்ழ்வளிக்கப்பட்டதாகக் கூறப்படும் புலிகள் தற்போது கொலைச் சம்பவங்கள் மற்றும் இனவாத தூண்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு கருணா அம்மான் தன்னை மறக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை இன்பராசா போன்ற குறித்த வகை புலி உறுப்பினர்கள் பொது பல சேனாவுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்ட சர்ச்சை நிலவுகின்றமையும் இவ்வாறான புலி உறுப்பினர்கள் தலையெடுத்து செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.Vk

Share The News

Post A Comment: