இவ்வாரம் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க.

இன்று மாலை ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் மைத்ரியை சந்திக்கவுள்ள நிலையில் அனைத்து பேச்சுவார்த்தைகளும் பூர்த்தியடைந்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர் பதவிக்கு முன்மொழியப்படவுள்ளதாகவும் ஏலவே தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் ஆதரவை தெரிவித்துள்ள நிலையில் சில தினங்களுக்குள் ரணில் மீண்டும் பிரதமராவார் என ரவி மேலும் விளக்கமளித்துள்ளார்.

நேற்று இடம்பெறவிருந்த ஐ.தே.மு - மைத்ரி சந்திப்பு இன்று இரவு வரை பின்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share The News

Post A Comment: