இன்று மேன்முறையீடு பரிசீலனை : இதன் நிறைவிலையே அடுத்தக்கட்ட நடவடிக்கை !

பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க தனக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால தடையை நடைமுறைப்படுத்துவதைத்தடுக்கும் முகமாக உத்தரவோன்றை பிறப்பிக்குமாறு கோறி, மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த விஷேட மேன்முறையீட்டை இன்று வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் நேற்றுத்தீர்மானித்தது.

 அதனடிப்படையில் இன்றைய தினம் மேன் முறையீட்டு வழக்கு விசாரனைகள் முடிவடைந்த பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...