மகிந்தவினால் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தம்மை இடை நிறுத்தியதற்கு எதிராக மஹிந்த ராஜபக்ச தரப்பினர் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்றை தினம் இடம்பெற்றது. இதன்போது இந்த வழக்கினை எதிர்வரும் 16, 17, மற்றும் 18ஆம் திகதிகளுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக செயற்படவும் அமைச்சரவை அமைச்சர்கள் 49 பேருக்கு எதிராகவும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...